கள்ள காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவியை அடித்து கொன்ற கணவன் கைது

Author: kavin kumar
14 August 2021, 8:31 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே கள்ளகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மனைவியை அடித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே குல்லூர்சந்தையை சேர்ந்தவர் நாகமுத்து. இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். நிர்மலா இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர். நாகமுத்துக்கும் நிர்மலாவுக்கும் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நாகமுத்துக்கு வேறு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து உள்ளதால் கணவன் மணைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக நிர்மலா தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரை விட்டு பிரிந்து விருதுநகரில் உள்ள தனது உறவினா் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நாகமுத்து தனது மணைவியுடன் சமரசம் ஏற்பட்டு குல்லூர்சந்தையில் உள்ள தனது வீட்டிற்கு கூட்டி வந்து குடும்பம் நடத்தி உள்ளார். இந்த நிலையில் மீண்டும் தனது கணவா் வேறு பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை அறிந்த நிர்மலா தனது கணவா் நாகமுத்து அது குறித்து கேட்டு உள்ளார் அப்போது கணவன் மணைவி இடையே சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த சண்டையி்ல் நாகமுத்து தனது மணைவி நிர்மலாவை கட்டையால் தாக்கி உள்ளார். இந்த நிலையில் கட்டையால் தாக்கியதில் நிர்மலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் தனது மணைவியின் உடலை வீட்டின் அருகில் உள்ள தகர கொட்டகையில் வைத்து நாகமுத்து எரித்து உள்ளார். பின்னா் நிர்மலாவின் சாம்பலை குல்லூர்சந்தை அணைபகுதியில் தண்ணீர் கரைத்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தனது சகோதரியை காணவில்லை என நிர்மலாவின் அண்ணன் மூா்த்தி நாகமுத்துவிடம் கேட்டு உள்ளார். ஆனால் நாகமுத்து முறையாக பதில் சொல்லததால் சந்தேகம் அடைந்ந மூா்த்தி தனது சகோதரி நிர்மலாவை காணவில்லை உள்ள சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளி்த்து உள்ளார். புகாரின் பேரில் நாகமுத்துவை சூலக்கரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், கள்ளகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனது மனைவியை அடித்து கொன்றதை ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து சூலக்கரை போலீசார் நாகமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Views: - 220

0

0