மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை அடித்துக் கொன்ற கணவர்…! போலீசார் தீவிர விசாரணை

14 July 2021, 4:33 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே மீன் வளர்ப்பு பண்ணையில் தனியாக இருந்த பழங்குடி பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வழுதிகை மேடு கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சென்னை கொளத்தூரை
சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான மீன் பண்ணையில் தங்கி வேலைப்பார்த்து வந்த திருவாலங்காடு பகுதியைச் சார்ந்த பூங்காவனம் என்பவரது மனைவி அமுதா ஆகிய இருவரும் வேலையை முடித்து விட்டு இரவில் தனியாக உறங்கிக்கொண்டு இருந்தபோது, அப்போது அவ்வழியாக வந்த வழிப்போக்கர் ஒருவர் அமுதாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது சத்தம் கேட்டு எழுந்த அமுதாவின் கணவர் பூங்காவனம் ஆத்திரத்தில் அடையாளம் தெரியாத அந்த நபரை அடித்ததில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இருவரும் சேர்ந்து அவரது உடலை ஏரிக் கரையை ஒட்டிய பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரிக் கரையை ஒட்டிய பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக சூபலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், அங்கு வந்த மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மீன் பண்ணையில் வேலை பார்த்த பூங்காவனம் மற்றும் அவரது மனைவி அமுதாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவியிடம் தகாத முறையில் ஈடுபட்ட நபரை கணவன் அடித்து கொலை செய்து ஏரிக்கரையில் உடலை போட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மேலும் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்தும் உடல் அடையாளம் காணப்பட்ட பின்னரே
கொலைக்கான முழு விவரங்களும் தெரிய வரும் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 126

1

0