மக்களின் கோரிக்கைகளுக்கு ஈமெயில் மூலம் பதிலளிப்பேன்: காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் பேட்டி…

28 August 2020, 7:36 pm
Quick Share

திருவள்ளூர்: கொரோனா காலத்தில் பாராளுமன்றம் உறுப்பினரை பார்க்க முடியவில்லை என தொகுதி மக்கள் நினைக்க வேண்டாம் என காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருமான டாக்டர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் 15 ஊராட்சிகளில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் ஆழ்துளை மின் மோட்டார்களை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதி மூலம் வழங்கினார்.

பின்னர் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்களை பெற்றுக் கொண்ட அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் பாராளுமன்ற உறுப்பினரை பார்க்க முடியவில்லை
என்று தொகுதி மக்கள் யாரும் நினைக்க வேண்டாம்,

உங்களின் கோரிக்கைகளுக்கு ஈமெயில் மூலம் தங்களுக்கு பதிலளிப்பேன் என்றும், திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு பள்ளம் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கும், ஆரணி கொசஸ்தலை கூவம் ஆறுகளில் 8 முதல் 10 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் பிரச்சினையின்றி இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.