திருச்சியில் ஜல்லிகட்டு நடத்த உறுதுணையாக இருப்பேன்: திமுக வேட்பாளர் பழனியாண்டி வாக்குறுதி…

Author: Udhayakumar Raman
30 March 2021, 1:57 pm
Quick Share

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதியில் தடையில்லாமல் ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு நான் உறுதிதுணையாக இருப்பேன் என்று திமுக வேட்பாளர் பழனியாண்டி வாக்குறுதி அளித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பழனியாண்டி தனது தொகுதிக்கு உட்பட மல்லியம்பத்து ஊராட்சி ராமநாத நல்லூர், ஆளவந்தான் நல்லூர், அம்மையப்ப நல்லூர், செங்கதிர் சோலை, வாசன் வேலி, கோனார் சத்திரம், வாசன் சிட்டி, பெருங்குடி, சீராத்தோப்பு, சாத்தனூர், எகிரி மங்கலம், மேற்கு குழுமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது ஸ்ரீரங்கம் தொகுதி பெரும்பாலும் கிராமப்புறங்கள் நிறைந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர், கழிவுநீர், சாலை உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தருவேன் என்று உறுதியளித்தார். அப்போது ஜல்லிகட்டு நடைபெற உதவிட வேண்டும் என்று கிராம மக்கள் அவரிடம் கோரிக்கை வைத்தனர். ஸ்ரீரங்கம் தொகுதியில் தடையில்லாமல் ஜல்லிகட்டு நடைபெறுவதற்கு நான் உறுதிதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். பிரச்சாரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Views: - 82

0

0