மது போதையில் இயக்கப்பட்ட சொகுசு காரால் விபத்து:3 பேர் காயம்

Author: Udhayakumar Raman
25 September 2021, 1:57 pm
Quick Share

சென்னை: சென்னையில் மது போதையில் இருந்த நபர் ஓட்டி வந்த சொகுசு கார், தறிகெட்டு ஓடி சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் 3 பேர் காயமடைந்தனர்.

எழும்பூரைச் சேர்ந்த வில்சன் என்பவர் தனது 2 மகள்கள் உள்ளிட்ட மூவருடன் காரில் காசா மேஜர் சாலையில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சீறிய சொகுசு கார், தாறுமாறாக சாலையில் ஓடி வில்சன் என்பவரது கார், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காரில் இருந்த வில்சன், அவரது 2 மகள்கள், ஆட்டோ ஓட்டுநர், இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் காயமடைந்தனர். சிகிச்சைக்காக அவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வில்சன் காலில் முறிவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர், சொகுசு காரை ஓட்டி வந்த அண்ணா நகரைச் சேர்ந்த 56 வயதான ராதாகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர். அவர் மது போதையில் காரை இயக்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Views: - 145

0

0