அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளைக்கிணறுகளின் குடிநீர் இணைப்புகளுக்கு சீல்

18 November 2020, 9:24 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அனுமதியின்றி செயல்பட்ட ஆழ்துளைக்கிணறுகளின் குடிநீர் இணைப்புகளை  அகற்றி பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் சீல் வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் மீஞ்சூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் திருடி விற்பனை செய்யப்படுவதாக பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டனுக்கு புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் அவர் ஆய்வு மேற்கொண்டதில், 

ஆட்டந்தாங்கல் அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதியில் உரிய அனுமதியின்றி செயல்பட்ட  ஆழ்துளை கிணறுகளின்  குடிநீர் குழாய் இணைப்பு மின் இணைப்புகளை  துண்டித்து பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மேலும் உரிய அனுமதியின்றி ஆழ்துளை  கிணறுகளை அமைத்து குடிநீர் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவருவாய் துறையினர்  எச்சரித்தனர்.