பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட கூடாது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

18 August 2020, 10:34 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் பொதுமக்கள் அனைவரும் விநாயகர் சதுர்த்தி விழாவை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழா நெறிமுறைப்படுத்துதல் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் மற்றும் இந்து முன்னனியினர் கலந்து கொண்டனர். அப்போது அவர் மாவட்ட ஆட்சியர் பேசுகையில்,

கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்க 144 தடை உத்தரவானது 31.08.2020 ஆம் தேதி வரை அமலில் உள்ளதால் பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பது அல்லது சிலைகளை வைத்து வழிபடுவதோ விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வது, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ கூடாது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவைகொண்டாட தேவையான பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திட வேண்டும் என்றும், மேலும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கூறிய ஆட்சியர், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன் உட்பட பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Views: - 30

0

0