புதுச்சேரியில் புதிதாக 320 நபர்களுக்கு கொரோனா

By: Udayaraman
11 October 2020, 5:54 pm
TN Corona 5 Districts- updatenews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 320 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

புதுச்சேரி, மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மாநில அரசு, சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 253 நபர்களுக்கும், காரைக்காலில் 39 நபர்களுக்கும், ஏனாமில் 6 நபர்களுக்கும், மாஹேவில் 22 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 4695 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 26,291 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 4 நபர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 563 ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 31549 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 32

0

0