புதுச்சேரியில் மேலும் 490 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,913 ஆக உயர்வு..!!

18 September 2020, 3:48 pm
Corona_Mother_UpdateNews360
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 490 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 21,913 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் 397 நபர்களுக்கும், காரைக்காலில் 45 நபர்களுக்கும், ஏனாமில் 43, நபர்களுக்கும் மாஹேவில் 5 நபருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 4,761 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 16,715 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

புதுச்சேரியில் 5 நபர்களும், காரைக்காலில் 1 நபர்களும், கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 437ஆக உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21,913 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் சமூக இடைவேளி மற்றும் முககவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.

Views: - 7

0

0