தூத்துக்குடியில் இந்த ஆண்டு 62 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது: மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேட்டி…

30 August 2020, 4:06 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களில் இந்த ஆண்டு 62 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒன்பதாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பார்வையிட்டார். அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே எட்டயபுரம் சாலையில் அவசியமின்றி சென்றவர்களை நிறுத்தி அவர்களை அவர்களுக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். தொடர்ந்து வந்தவர்களுக்கு அவசர குடிநீரை அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஊரடங்கு காலத்தில் இதுவரை 8,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,640 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை திருப்பி கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேலும் மாவட்டத்தில் கஞ்சா பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்தது தொடர்பாக இதுவரை 30 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அது தொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவரிடமிருந்து 52 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மாவட்டத்தில் நடைபெறும் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காக தனிப்படைகள் மூலமாக கண்காணிக்கப்பட்டு கடந்த 2 மாதத்தில் மட்டும் 20 பேர் கொண்ட சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் தேவையின்றி அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவீடுகள் வெளியிடுவது தெரிந்தால் அவர்கள் மீது தொடர்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Views: - 24

0

0