திருச்சி மறைமாவட்ட புதிய ஆயர் பதவியேற்பு

Author: Udhayakumar Raman
29 June 2021, 7:31 pm
Quick Share

திருச்சி: திருச்சி மறைமாவட்ட புதிய ஆயராக ஆரோக்கியராஜ் இன்று பதவியேற்றார்.

திருச்சி மறைமாவட்டத்தில் ஆயராக பதவி வகித்து வந்த அந்தோணி டிவோட்டா மறைவிற்கு பின்னர் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் பொறுப்பு ஆயராக பதவி வகிந்து வந்தார். இந்நிலையில் திருச்சி மறை மாவட்டத்திற்கு புதிய ஆயர் தொடர்பான பரிந்துரை ரோம் தலைமை நிர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் திருச்சி மறைமாவட்ட ஆயர் தேர்வானது ரோமன் கத்தோலிக் தலைமையகமான ரோமில் நடைபெற்று. இதனைத் தொடர்ந்து புதிய ஆயராக ஆரோக்கியராஜ்(67) தேர்தெடுக்கப்பட்டதற்க்கான அறிவிப்பு வௌியிடப்பட்டது. ரோமின் தலைமையக அறிவிப்பிள் பேரில் ஆயர் பொறுப்பேற்கும் விழா திருச்சி மேலப்புதுார் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.

இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அன்புரோஸ் முன்னிலையில் ஆரோக்கியராஜ் ஆயராக பொறுப்பேற்றுக்கொண்டார். இன்று புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆயர் ஆரோக்கியராஜ் 1954ஆம் ஆண்டு குளித்தலை லாலாபேட்டையில் பிறந்தார், கர்நாடக மாநிலம் பெங்களுருவில் குருமடத்தில் பயின்று 1981ஆம் ஆண்டு குருபட்டம் பெற்றார். திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பட்டி, திருச்சி மாவட்டம் உடையாபட்டி மற்றும் திருச்சி மேலப்புதுார் மரியன்மை பேராலயம், சகாயமாதா தேவாலயங்களில் பங்குத்தந்தையாகவும், தமிழ்நாடு ஆயர்கள் கவுன்சிலின் பிராந்திய செயலாளர், பவுல்செமினெரியின் ரெக்டர், மறைமாவட்ட அதிபர் என பல பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 196

0

0