பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது…

6 August 2020, 11:21 pm
Quick Share

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரம் அருகே பள்ளி மாணவியை ஏமாற்றி திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் சட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் கருணாகரன் (27). இவரும் அதே பகுதியில் கல்வி பயின்று வரும் ஒன்பதாம் வகுப்பு மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென பள்ளி மாணவியை தனியாக அழைத்து சென்ற கருணாகரன் ஆசை வார்த்தை கூறி கோயிலில் திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி பெற்றோர்களிடம் கூறியதை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அச்சிறுமியின் தாய் கருணாகரன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர் கருணாகரனை போக்சோ சட்ட பிரிவின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தியதில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஏமாற்றி திருமணம் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது இதனையடுத்து கருணாகரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 30

0

0