உர வியாபாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை: கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பறிமுதல்
1 September 2020, 11:00 pmஈரோடு: கோபியில் உர வியாபாரிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கள்ளிப்பட்டி இடத்தில் தனியாருக்குச் சொந்தமான உர மொத்த விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. உர விற்பனை மையத்தின் உரிமையாளர் வீட்டில் நள்ளிரவில் வந்த கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அருகிலுள்ள அவரது அலுவலகம் மற்றும் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது. நிலம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து சோதனை வருமான வரி சோதனை நடைபெறுவதாகவும், இதில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் ரொக்கம் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் தெரியவருகிறது.
0
0