மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தமிழகத்திலேயே சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: வனத்துறையினர் தகவல்

Author: Udhayakumar Raman
5 August 2021, 3:54 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தமிழகத்திலேயே சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் 20.43 சதவீதம் வந்துள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயத்தில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் இருப்பதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் மற்றும் புலிகள் சரணாலயம் அறிவிக்கப்பட்டது. இந்த சரணாலயத்தில் புலிகள்,சிறுத்தைகள், யானைகள்,காட்டெருமைகள் மற்றும் ராஜநாகங்கள், புள்ளிமான்கள், கரடி என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வாறு வசித்து வரும் வன விலங்குகளை அவ்வபோது வனத்துறையினர்,வன ஆர்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் சேர்ந்து கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.

மேலும் வனத்துறை சார்பில் அடிக்கடி அடர்த்தியான வனப்பகுதியில் கேமராக்களை பொருத்தி வனவிலங்குகளை படம் பிடித்து அதை எண்ணிக்கையை அறிந்து வருகின்றனர். இந்த வனப்பகுதியை பொருத்தவரை விருதுநகர் மாவட்ட்த்தில் சுமார் 70 கிலோமீட்டர் தொலைவிற்கு வனவிலங்குகள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை. இந்நிலையில் சமீபத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகள் பற்றி கணக்கெடுக்க வனத்தின் பல்வேறு பகுதிகளில் புலிகள், சிறுத்தைகள் நடமாட்டம் அறிந்து அதனை பதிவு செய்யும் நோக்கத்தோடு நவீன கேமராக்களை வனத்துறை சார்பில் பொருத்தி இருந்தனர்.

இந்த கேமராக்களில் பல்வேறு வனவிலங்குகள் பதிவாகியிருந்தது. இதில் அதிக அளவு யாரும் எதிர்பாராத வகையில் சிறுத்தைகளை பதிவாகி உள்ளது. மேலும் இந்த ஆய்வில் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் அதிக அளவு சிறுத்தைகளை வசிக்கும் இடமாக இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 2021 ஆய்வின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் 2.11 என்ற சதவித அளவில் சிறுத்தைகள் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 7.05 என்ற விகிதத்திலும், களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் 10.11 எந்தவிதத்திலும் சிறுத்தைகள் உள்ளது. ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் உள்ள சரணாலயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக 20.43 சதவீதம் அளவுக்கு சிறுத்தைகள் இருப்பது தெரியவந்து.

இதன் அடிப்படையில் 908 க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை ரேஞ்சர் செல்லமணி இடம் கேட்டபோது ஸ்ரீவில்லிபுத்தூர் வனபகுதியை பொருத்தவரை வனவிலங்குகளுக்கு வாழ பாதுகாப்பான இடமாக உள்ளது.இந்த பகுதி சரணாலயப் பகுதியாக இருப்பதால் அடிக்கடி கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் வேட்டை சம்பவம் நடைபெறாமல் இருக்க வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்டு அடிக்கடி திடீர் சோதனை நடத்தப்படுகிறது. மேலும் பொருத்தப்படும் கேமராக்கள் மூலம் வன விலங்குகளை மட்டுமன்றி சமூக விரோதிகள் நடமாட்டத்தை அறியவும், இந்த கேமரா மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.மேலும் சிறுத்தைகள் அதிகரிக்க சரிவிகித உணவு அதற்கேற்ற உணவு இந்த பகுதியில் இருப்பதால் அதன் வளர்ச்சி எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளது என வனத்துறை அதிகாரி செல்லமணி தெரிவித்தார்.

Views: - 117

0

0