மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க நடவடிக்கை: கோவையில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிப்பு..!!

Author: Aarthi Sivakumar
30 August 2021, 4:02 pm
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுபடுத்தம் வகையிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையிலும் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தடுப்பூசி அதிகமாக தேவைப்படுகிறது. இந்த நிலையில் தடுப்பூசி மையங்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சூழலில், கோவையில் இன்று முகாம்களும் அதிகபடுத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவையில் வழக்கமாக இருபதாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் மூன்று மடங்கு தடுப்பூசிகள் அதிகமாக வழங்கப்பட்டுள்ளன.

ஊரக பகுதிகளில் 52 முகாம்களில் 19,500 தடுப்பூசிகளும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 66 மையங்களில் 26,400 தடுப்பூசிகளும், கோவை மாவட்ட முழுவதுமாக 24 சிறப்பு முகாம்களில் 18,410 தடுப்பூசிகளும் இடப்படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதுமாக 142 முகாம்களில் 64 ஆயிரத்து 310 கோவிஷீல்டு இடப்படுகின்றன.

Views: - 161

0

0