ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

16 May 2021, 6:19 pm
Quick Share

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 3000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கோடை காலம் தொடங்கியதில் இருந்து காவிரியாற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. விநாடிக்கு 400 கன அடிக்கும் குறைவான தண்ணீர் வரத்து இருந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா காவிரி ஓடும் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை விநாடிக்கு சுமார் 2000 கன அடியாக இருந்த நிலையில் இன்று நிலவரப்படி காவிரியாற்றில் தண்ணீர் வரத்து விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் மழை தொடர்ந்தால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அளவு மேலும் அதிகரிக்கக் கூடும். காவிரியாற்றில் வரும் தண்ணீரின் அளவை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையில், கொரோனா பாதிப்பு காரணமாக ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

Views: - 38

0

0