குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்களுக்கு உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்…

Author: kavin kumar
5 November 2021, 4:56 pm
Quick Share

மதுரை: மாசி வீதிகள் தோறும் கிடந்த குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உதவினர்.

தீபாவளி பண்டிகையையொட்டி மதுரை மட்டுமல்லாது மதுரையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மதுரை மாநகரை நாடி வருவது வழக்கம் அந்த வகையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மதுரையின் மையப்பகுதியாக விளங்கக்கூடிய மதுரை தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி, மேலமாசி வீதி, கீழமாசி வீதி, விளக்குத்தூண் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். அதன் தொடர்ச்சியாக விளக்குத் தூன் உள்ளிட்ட நான்கு மாசி வீதிகளிலும் பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள் விட்டுச்சென்ற பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் கவர்கள் உள்ளிட்ட குப்பைகள் சாலை தோறும் மலை மலையாக குவிந்து கிடந்தன. அவற்றை இன்று துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து அகற்றினர். அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய வாலிபர் சங்கத்தினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மதுரை மாசி வீதிகளில் குவிந்துள்ள குப்பைகளை இரண்டு லாரிகளின் மூலம் அகற்றும் பணி ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் பாலா மாவட்ட அமைப்பாளர் செல்வா துணை செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Views: - 176

0

0