சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் மருத்துவமனை முற்றுகை

5 November 2020, 11:28 pm
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் ஒரு மாத ஆண் குழந்தை உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அரசு மருத்துவமனையில் அரங்கம் குப்பத்தை சேர்ந்த குமார் அவரது மனைவி லட்சுமியின் பிறந்த ஒரு மாதமே ஆன ஆண் குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அழைத்து வந்தபோது அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாததால் செவிலியர் மட்டுமே இருந்த நிலையில் சிகிச்சை அளிக்க முடியாமல் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் மேல் சிகிச்சைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஆம்புலன்ஸ் வராததாலும், குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பாலைவனம் காவல்துறையினர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையில் வருவாய்த்துறையினர் பொதுமக்களிடம் சமரசம் மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும், உரிய ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

Views: - 20

0

0