கிராமத்தின் மையப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்

20 June 2021, 4:33 pm
Quick Share

திண்டுக்கல்: விளாம்பட்டி அருகே கிராமத்தின் மையப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எத்திலோடு பஞ்சாயத்தில் அமைந்துள்ள முத்துலாபுரம் கிராமத்தில் கலைஞர் காலனி பகுதியில் 1000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாழும் பொதுமக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த கூலித் தொழிலாளிகள் ஆவார்கள். இந்தப் பொதுமக்கள் வசிப்பிடமான கலைஞர் காலனி மையப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வருகிறார்கள். இதை நாய் இறந்தாலும் மற்றும் நோய் தாக்கப்பட்டு ஆடு , மாடுகள் கோழிகள் எது இறந்தாலும் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீசி சென்று விடுகிறார்கள்.

இதன் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் கடுமையாக வீசுகிறது. இதன் காரணமாக ஏதேனும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். மேலும் அங்கன்வாடி அருகில் பாதுகாப்பற்ற சாக்கடையில் கழிவுநீர் வெளியே வருவதால் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் இப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சி யாருக்கும், தமிழக முதலமைச்சருக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 87

0

0