மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் நோய் தொற்று குறைவு: போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்…

22 September 2020, 7:53 pm
Quick Share

கரூர்: மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் நோய் தொற்று குறைவாக உள்ளதாகவும், ரூ.150 மதிப்புள்ள மூலிகை மருந்து பாக்கெட் பொதுமக்கள் நலன் கருதி 100 ரூபாய்க்கு வழங்கப்படுவதாகவும் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பு மருந்து மலிவு விலை மருந்து பெட்டகத்தை பெட்டகம் விற்பனையும், தமிழக முதல்வர் கரூர் மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள 108 அவசர ஆம்புலன்ஸ் சேவையும் துவங்கி வைத்தார் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ 150 மதிப்புள்ள மூலிகை மருந்து புத்தகம் பொதுமக்கள் நலன் கருதி 100 ரூபாய்க்கு அம்மா மருந்தகம் மற்றும் பேருந்து நிலையம் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்து பெட்டகத்தில் கபசுர குடிநீர் பாக்கெட், ஆடு தொடா இலை சாறு 100 மில்லி, அமுக்கரா சூரணம் 50 மாத்திரை ஆகியவை அடங்கியுள்ளது. ஒரு குடும்பத்தில் ஐந்து நபர்கள் இருப்பாகளேயானால் அவர்களுக்கு 5 நாட்களுக்கு இந்த மருந்து பெட்டகம் உதவியாக இருக்கும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் கரூர் மாவட்டத்தில் நோய்த்தொற்று குறைவாக உள்ளது. இந்த மருந்து பெட்டகத்தில் உள்ள மருந்துகளை எடுத்துக்கொண்டால் பொதுமக்கள் நோய்த் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும் இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 7

0

0