6 மாதங்களுக்கு பின் சிறைவாசிகள் உறவினர்களை சந்திக்க அனுமதி: ஏராளமான சிறைவாசிகள் உறவினர்கள் சிறைக்கு வருகை

Author: kavin kumar
17 August 2021, 6:56 pm
Quick Share

மதுரை: மதுரை மத்திய சிறையில் 6 மாதங்களுக்கு பின் சிறைவாசிகள் உறவினர்களை சந்திக்க அனுமதிப்பட்டதையடுத்து ஏராளமான சிறைவாசிகள் உறவினர்கள் சிறைக்கு வருகை தந்தனர்.

மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பெண் சிறைவாசிகள் தனி தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 6மாதங்களாக சிறைவாசிகளை அவரது உறவினர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து மற்ற நாள்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் மாதத்திற்கு ஒரு குடும்பத்திற்கு அனுமதி வழங்கப்படும்.இந்நிலையில் 6 மாதத்திற்கு பின் இன்று சிறைவாசிகளை சந்திக்க மதுரை மத்திய சிறை நிர்வாகம் அனுமதி அளித்த நிலையில், ஏராளமான உறவினர்கள் சிறைவாசிகளை சந்திப்பதற்காக வருகை தந்தனர். சிறைவாசிகளை சந்திக்கும் உறவினர்கள் சிறைக்குள் செல்லும் போது முக கவசம் அணிந்து செல்லவும், காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

Views: - 206

0

0