வாக்காளர் பட்டியலில் திருத்த முகாமினை பார்வையிட்ட இன்னசென்ட் திவ்யா

21 November 2020, 3:30 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் வரும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமினை பார்வையிட்டு புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் நபர்களுக்கு படிவங்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் , கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள்  மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள 360 வாக்குச்சாவடிகளில் இந்த முகாம் நடைபெறவுள்ளதாகவும்,  வாக்குச்சாவடி அலுவலர் முன்னிலையில்   வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் புதிதாக பெயர் சேர்க்கவும்,

நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்  என சாந்தி விஜயா வாக்குச்சாவடியை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இன்ன சென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் வரும் ஜனவரி 1ந் தேதியன்று 18 வயதை  எட்டும் அனைவரும் தற்போது விண்ணப்பிக்கலாம் என்றார்.

Views: - 16

0

0