சாதி சான்றிதழ் வழங்க கோரி வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி நூதன போராட்டம்

16 November 2020, 6:54 pm
Quick Share

திருப்பத்தூர்: ஜவ்வாது மலையில் சாதி சான்றிதழ் வழங்க கோரி 150க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜவ்வாது மலை பகுதியில் புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லி வாசல் நாடு, போன்ற ஊராட்சி பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் தங்களுக்கு முறையான சாதி சான்றிதழ்கள் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் வழங்கவில்லை எனக் கூறி தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடிகள் கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக இப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான எஸ்டி வகுப்பைச் சார்ந்த பிரிவினருக்கு, சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்து வரும் வருவாய் அதிகாரிகளை கண்டித்து இன்று முதல் அப்பகுதி பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் நாளான இன்று தங்கள் வீடுகளில் கருப்புக் கொடிகள் கட்டி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 24

0

0