குழந்தை விற்பனையில் ஈடுபட்ட காப்பகம் குறித்து விசாரணை: ஆட்சியர் அணிஷ் சேகர் பேட்டி…

Author: Udhayakumar Raman
1 July 2021, 1:31 pm
Quick Share

மதுரை: மதுரையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தனியார் காப்பகம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் கூறியுள்ளார்.

மதுரையில் சி.ஐ.ஐ, என் இண்டியன்ஸ் பங்களிப்புடன் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் தடுப்பு ஊசி நடமாடும் ஊர்தியை மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநாகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் எம்.எல்.ஏ தளபதி மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மக்கள் நடமாடும் பகுதிகள், காய்கறி சந்தைகள் மற்றும் கிராமப்புற பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் தடுப்பூசி ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் ஒரு நாளுக்கு 8 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நடமாடும் ஊர்தியை கொண்டு மக்கள் நடமாடும் பகுதிகளில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. தடுப்பூசி வரத்தை பொறுத்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. குழந்தை விற்பனை செய்த தனியார் காப்பகம் குறித்து விசாரனை நடைபெறுகிறது, விசாரணை முடிவுக்கு பின்னரே முழுமையான விபரங்கள் தெரிய வரும்” என கூறினார்.

Views: - 111

0

0