கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: இன்சூரன்ஸ் நிறுவன சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரிக்கை..!!

Author: Aarthi Sivakumar
4 August 2021, 6:43 pm
Quick Share

கோவை: கோவையில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன சட்டத்திருத்த மசோதா 2021-ஐ ரத்து செய்ய கோரி கோவையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதைக் கண்டித்து நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவை நஞ்சப்பா சாலை யுனைட்டட் இன்சூரன்ஸ் அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மத்திய அரசு தங்களது கோரிக்கைக்கு செவிசாய்க்கா விட்டால் போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Views: - 192

0

0