உதகையில் தினசரி சந்தையில் தூய்மை பணி தீவிரம்

Author: Udayaraman
5 October 2020, 6:57 pm
Quick Share

நீலகிரி: உதகை நகராட்சி தினசரி சந்தையில் உதகமண்டலம் நகராட்சி சார்பில் நகராட்சி சந்தை முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள், சார்பில் தூய்மை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் உழவர் சந்தை மற்றும் நகராட்சி தினசரி சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் துறை சார்ந்த அதிகாரிகள் நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து உதகை நகராட்சி தினசரி சந்தையில் இன்று உதகமண்டலம் நகராட்சி சார்பில் சந்தை முழுவதும் தூய்மை படுத்தப்பட்டு அனைத்து பகுதிகளிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது.

Views: - 42

0

0