சின்னவெங்காயம் அறுவடை தீவிரம், தொடர்ந்து விலைகுறைந்து வருவதால் விவசாயிகள் கவலை…

19 August 2020, 7:31 pm
Quick Share

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சின்னவெங்காயம் அறுவடைதீவிர அடைந்துள்ளதால் அதன் விலைகுறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து ஒரு கிலோ சின்னவெங்காயத்தின் விலை 120 ரூபாயிலிருந்து 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்சியடைந்தனர். தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்ததால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யத்துவங்கினர். 60 நாளில் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போதுதருமபுரி மாவட்டத்தில் பரவலாக சின்னவெங்காயம் அறுவடை செய்யும் பணி துவங்கி உள்ள நிலையில், தற்போது சின்ன வெங்காயத்தின் விலைதொடர்ந்து சரிந்துவருவதால், ஒரு கிலோ சின்னவெங்காயம் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தொடர்ந்து சின்னவெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Views: - 22

0

0