வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைக்கும் பணி தீவிரம்.!!

Author: kavin kumar
8 October 2021, 4:58 pm
Quick Share

காஞ்சிபுரம்: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 203, குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 398 வாக்குச்சாவடி சமயங்களுக்கும் வாக்குச்சீட்டு, வாக்குப் பெட்டி உள்ளிட்ட பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்களுக்கு கடந்த ஆறாம் தேதி அன்று முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் நாளைய தினம் இரண்டாம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளடக்கிய ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 203, குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள 398 வாக்குச்சாவடி சமயங்களுக்கும் வாக்குச்சீட்டு, வாக்குப் பெட்டி, கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள், முதியவர் மற்றும் ஊனமுற்றோர் வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Views: - 115

0

0