பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை அனுப்பும் பணி தீவிரம்….
Author: kavin kumar28 October 2021, 6:54 pm
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகளை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நவம்பர் 01 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபடும் என அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட 83 தொடக்கபள்ளிகள் மற்றும் நடுநிலைபள்ளிகளை திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 8000 மாணவ, மாணவிகளுக்கான புத்தகங்கள் மற்றும் சீருடைகளை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பும் பணி கீழப்பழூவூரில் இருந்து இன்று நடைப்பெற்றது. இதனை திருமானூர் வட்டார கல்வி அலுவலர் சாந்தி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அந்தந்த ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கபட்ட புத்தங்கள் மற்றும் சீருடைகளை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் மூலம் எடுத்து சென்றனர்.
0
0