திருச்சி : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தலுக்கு தேவையான பொருட்கள் அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள நகர்புற ஊராட்சி தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் வாக்கு சாவடிகளுக்கு வாக்குப் பதிவு எந்திரங்கள், தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வழிகாட்டுதலின்படி கிருமிநாசினிகள், வெப்பமானி உள்ளிட்ட கருவிகள் அனுப்பும் பணி திருச்சியில் பொன்மலை, அரியமங்கலம், அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோட்ட அலுவலகங்களிலிருந்து காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பும் பணி துவங்கியது.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒவ்வொரு கோட்டத்திற்கு உட்பட்ட வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடி முழுவதும் கட்டைகளால் வரிசை சென்று வாக்கு அளிக்க ஏதுவாக வழிகளை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகைகள் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது வாக்கு சாவடியில் பணிபுரியும் அலுவலர்கள் தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு வார்டுக்கு உட்பட்ட வாக்கு சாவடி மையத்திற்கு கிருமிநாசினி , முககவசம், சர்ஜிகல் ஃபேஸ் மாஸ்க், ரப்பர் கையுறை, பிபிகிட், டிஸ்போசபிள் கையுறை உள்ளிட்ட 11 விதமான பொருட்கள் அடங்கிய அட்டை பெட்டி மற்றும் அதனை அப்புறப்படுத்தி ஏதுவாக பிளாஸ்டிக் வாளிகள், மேலும், எழுது பொருட்கள், வாக்களித்த பின்பு கையில் வாக்காளர்கள் விரல்களில் வைக்கப்படும் மை புட்டி, சின்னம் மற்றும் பெயர்கள் அடங்கிய சுவரொட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி பொன்மலை கோட்ட அலுவலகத்திலிருந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பிரபாகரன் மற்றும் சிவபாதம் தலைமையிலான அதிகாரிகள் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டுள்ள மையம் கதவின் சீலை கட்சி பிரமுகர்கள் முன்பாக அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் மற்றும் வாக்குப்பதிவு மையத்தின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோர் லாரி மற்றும் வேன்களில் கொண்டு சென்றனர்.
வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் கொண்டு செல்லும் பணிகள் இரவுக்குள் முடிக்கப்படும். அனைத்து பணிகளையும் திருச்சி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவராசு நேரில் பார்வையிட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.