கேரளாவில் தீவிரமடையும் கொரோனா: தமிழக-கேரள எல்லையில் பலத்த கண்காணிப்பு…!!

26 February 2021, 3:48 pm
kerala 3 - updatenews360
Quick Share

களியக்காவிளை: கேரள மாநிலத்தில் கோவிட்-19 தீவிரம் அடைந்து வருவதை தொடர்ந்து தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் பொதுமக்கள் தீவிர கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் கொரானா தொற்று வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சி தலைவர் அரவிந்த் உத்தரவின் பேரில் தமிழக கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளையில் கோரானா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு களியக்காவிளை வழியாக நுழையும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைக்கு மறுப்பவர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

Views: - 4

0

0