ஈரோட்டில் பறக்கும்படையினர் தீவிர வாகனச்சோதனை

1 March 2021, 7:28 pm
Quick Share

ஈரோடு: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தினால் பறக்கும்படையினர் ஈரோட்டில் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டபேரவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்றன ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இதனால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது ‌.ஈரோடு மாவட்டத்தின் எல்லையான கருங்கல்பாளையம், கொடுமுடி,விஜயமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் காவல்துறையினர் சார்பில் சோதனைசாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பெரியார் நகரில் பரிசு பொருட்கள்,உரிய ஆவணங்கள் இன்றி அதிகளவு பணங்கள் எடுத்து சொல்பவர்களை குறித்து காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் ஒளிப்பதிவாளர் கொண்ட பறக்கும்படை அதிகாரிகள் வாகனங்களை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 7

0

0