போடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு: பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார்…!!

Author: Aarthi Sivakumar
8 August 2021, 4:40 pm
Quick Share

தேனி: போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி பகுதிகளில் தொகுதி பணி குறித்து தமிழக முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக கழக ஒருங்கினப்பாளர்களும் போடி சட்டமன்ற உறுப்பினரும் ஓ.பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டார்.

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஊராட்சி பகுதிகளான போடி அம்மாபட்டியில் உள்ள ஆலையகவுண்டன்குளம் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை போடி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக கழக ஒருங்கினைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து, அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை வசதி சீர்மைப்பு பணிகளை செய்து தருமாறு கேட்டு கொண்டார்.

பின்னர் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 258

0

0