பழைய கொலை வழக்குகளில் தொடர்புடைய 48 குற்றவாளிகளிடம் விசாரணை: 4 பேர் கைது…

Author: Udhayakumar Raman
24 September 2021, 7:37 pm
Quick Share

அரியலூர்: பழைய கொலை வழக்குகளில் தொடர்புடைய 48 குற்றவாளிகள் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த பத்தாண்டுகளாக பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்று போலீசார் காவல் நிலையத்திற்க்கு அழைத்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மாவட்டத்தில் 48 பேரை அந்தந்த காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. மேலும் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டுவரும் 4 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். மீதமுள்ள 44 பேரிடம் நன்னடத்தை உறுதி மொழி பத்திரத்தில் கோட்டாச்சியர் முன்னிலையில் கையெழுத்து பெறப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Views: - 112

0

0