ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகார் குறித்து புலன் விசாரணை: திருச்சி மத்திய மண்டல ஐஜி பேட்டி

Author: kavin kumar
10 August 2021, 6:58 pm
Quick Share

தஞ்சை: ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடி புகாரில் காவல்துறையினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பான கேள்விக்கு, புலன் விசாரணை என்னென்ன வருகிறதோ அனைத்தும் விசாரிக்கப்படும் என திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தஞ்சை காவல்துறை துணை தலைவர் அலுவலகத்தில் ஆரம்ப காலத்தில் காவலர்கள் பயன்படுத்திய பழமை வாய்ந்த பொருட்களை காட்சிப் படுத்தும் வகையில் கண்காட்சி அமைப்பதற்கான பணிகளை ஆய்வு செய்த திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இன்னும் புகார்கள் வந்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த ஐஜி, போலீஸ் கஸ்டடியில் எம் ஆர் கணேசன் எடுத்து விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும்,

மக்கள் இழந்த பணத்தை பறிமுதல் செய்வதற்கும், அந்த பணத்தை அவர்கள் எந்தெந்த வழியில் என்ன செய்திருக்கிறார்கள் என்பது குறித்து புலன் விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம், இதுவரை 20 கோடி ரூபாய்க்கு வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மேலும் 15 கோடி ரூபாய் மோசடி குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும்! அதன் தொடர்பான முதற்கட்ட விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர், ஹெலிகாப்டர் சகோதரர்கள் மோசடியில் காவல்துறையினரும் மீதான புகார்கள் எழுந்திருப்பது தொடர்பான கேள்விக்கு புலன் விசாரணையில் என்னென்ன வருகின்றதோ அனைத்தையும் விசாரிப்போம் என அவர் தெரிவித்தார்.

Views: - 223

0

0