கோவையில் துப்பாக்கி கலாச்சாரம் பரவுகிறதா…? இருவரை பிடித்து போலீசார் விசாரணை…

Author: Udhayakumar Raman
29 November 2021, 11:56 pm
Quick Share

கோவை: கோவையில் தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் தங்கி இருந்த 2 பேரை போலீசார் கைது, அவர்களிடமிருந்த இரண்டு ஏர்பிஸ்டல் துப்பாக்கிகள், பத்து சிலிண்டர்கள், ஒரு பட்டன் கத்தி, மற்றும் பால் புல்லட் ஒரு பாக்கட் உள்ளிட்டவகளை பறிமுதல் செய்தனர்.

கோவையில் உள்ள போலீசாருக்கு துப்பாக்கிகளுடன் மர்ம நபர்கள் சுற்றுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கோவை இரத்தினபுரி போலீசார் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அந்த விடுதியில் இருவர் போலியான முகவரி கொடுத்து தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில் ஒருவர் பெயர் சாகுல்ஹமீது, மற்றும் அவரது நண்பர் சக்தி என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் அந்த தங்கும் விடுதியில் இரண்டு அறைகள் எடுத்துள்ளது தெரியவந்தது.

போலீசார் அங்கு நடத்திய சோதனையில், இரண்டு ஏர்பிஸ்டல் துப்பாக்கி இரண்டு, பத்து சிலிண்டர்கள், ஒரு பட்டன் கத்தி, மற்றும் பால் புல்லட் ஒரு பாக்கட் வைத்திருந்ததும் தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த இரத்தினபுரி காவல்துறையினர், தங்கும் விடுதி காந்திபுரம் காட்டூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், அந்த காவல் நிலையத்தில் சாகுல் ஹமீது, சக்தி, மற்றும் அவர்களிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஒப்படைத்தனர். காந்திபுரம் போலீசார் இருவரிடமும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோவையில் கடந்த சில மாதமாக கொள்ளை,வழிப்பறி, திருட்டு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், துப்பாக்கி கலாச்சாரமும் அதிகரித்து வருகிறதோ என்று கோவைமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Views: - 126

0

0