கொடைக்கானல் படகு குழாமில் ஆறு மட்டும்தானா? சுற்றுலா பயணிகள் வைத்த கோரிக்கை!!

Author: kavin kumar
23 October 2021, 1:39 pm
Kodai Boat -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான படகு குழாமில் ஆறு படகுகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் கூடுதல் படகுகள் இயக்கப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலா இடமாக இருந்து வருகிறது. கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களை கண்டு ரசித்தாலும் கொடைக்கானல் என்றாலே சுற்றுலாப் பயணிகளுக்கு நட்சத்திர ஏரி நினைவுக்கு வரும்.

இங்கு நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்வர். நட்சத்திர ஏரியில் மொத்தம் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு என இரண்டு படகுகளும் நகராட்சிக்கு என ஒரு படகு குணமும் மட்டுமே அமைந்துள்ளது.

ஆனால் நகராட்சி படகு குழாமில் துடுப்பு படகுகள் மட்டுமே 6 இருந்து வருகிறது. இதனால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி சார்பில் இயக்கப்படும் படகு குழாமில் கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Views: - 200

0

0