கொரோனா முன்களப்பணியாளர் 811 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்…

15 August 2020, 3:36 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகரில் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தேசியகொடியை ஏற்றி வைத்து, கொரோனா முன்களப்பணியாளர் 811 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

விருதுநகரில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற 74வது சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சின்ன மூப்பன்பட்டி கிராம உதவியாளரின் மகனுக்கு கருணை அடிப்படையில் வாரிசு முறையில் அரசு பணிக்கான நியமண ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய 12 துறையை சேர்ந்த 811 நபர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் கொரோன தொற்றால் உயிர் இழந்த சுந்தர பாண்டியம் பேரூராட்சி செயல் அலுவலரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதியாக ரூ 25 லட்சத்திற்க்கான காசோலையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

Views: - 26

0

0