மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகள் வழங்கல்

5 February 2021, 8:21 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்குவது தொடர்பாக வயது வரம்பு தளர்த்தல் தேர்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளிகள் தேர்வுக்குழு உறுப்பினர்களான தனித்துணை ஆட்சியர் ,அரசு பொது மருத்துவமனை மருத்துவர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆகியோரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்வுக் கூட்டத்தில் மொத்தம் பெறப்பட்ட 54 மனுக்களில் 43 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு தீர்வு பெற்றுள்ளனர். 11 நபர்கள் வயது தளர்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை,

கலந்து கொண்ட 43 நபர்களுக்கு தேர்வுக் குழுவினரால் நேர்க்காணல் நடத்தப்பட்டது. இதில் ஒரு நபர் மட்டும் நிராகரிக்கப்பட்டு, 42 நபர்கள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், தேர்வு செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Views: - 17

0

0