மாணவர்கள் நீட் தேர்வால் தான் உயிர் இறக்கிறார்கள் என்பது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு: பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி

13 September 2020, 10:13 pm
Quick Share

விருதுநகர்: தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் தான் உயிர் இறக்கிறார்கள் என்பது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் கூறி வருவதாகவும், அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என சாத்தூரில் பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த சிறப்பு பொதுகுழு கூட்டத்திற்கு பாஜகவின் மாநில துணைத்தலைவரும், தென் மண்டல பொறுப்பாளருமான நயினார் நாகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளுக்கு தற்போது பேசுவதற்கு வேற சப்ஜெட் இல்வாத காரணத்தால் தான் நீட் பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்.

தமிழக மாணவர்கள் நீட் தேர்வால் தான் இறக்கிறார்கள் என்பது ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் கூறி வருகிறார்கள். அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறினார். மேலும் பேசிய நயினார் நாகேந்திரன் நீட் தேர்வு என்பது பல்வேறு மாநிலங்களில் நடைபெறக்கூடியது ஆனால் எட்டு மாதம் கழித்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் கூறி வருவதை ஸ்டாலின் விளக்க வேண்டும் எனக் கூறினார்.

மேலும் தமிழகத்தில் தற்போது வரை நடைபெற்ற தேர்தலை பொறுத்தவரை தேர்தலில் கட்சிகளின் கூட்டணி அவர்களின் தேர்தல் அறிக்கையை வைத்து தான் தேர்தல் நடந்து இருக்கு. ஆனால் அந்தந்த காலத்தில் ஏற்படும் சூழ்நிலையை வைத்து மக்கள் ஒட்டு போடுவது இல்லை எனவும் நீட் தேர்வு விவகாரத்தால் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது என்றார். நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் வெளி மாநிலத்தில் படிக்க அதிக அளவில் வாய்ப்பு கிடைக்கிறது என்றார். திரைப்பட நடிகர் விஷால் பாஜகவில் இணைந்தால் சேர்த்து கொள்வோம் என்றார். மேலும் யாருடைய ஆதரவு யாருக்கு என்பதை விட கூட்டணி பற்றித்தான் பேசுவார்கள் எனவே
ரஜினி விருப்பப்பட்டால் பாஜக ரஜினியுடன் கூட்டணி வைக்கும் என்றார்.

Views: - 0

0

0