தேவையற்ற பொருள்கள் திமுகவை விட்டு வெளியில் செல்வது எங்களுக்கு நல்லதுதான்: சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி…

13 August 2020, 10:31 pm
Quick Share

திருவாரூர்: திமுகவிலிருந்து விபி துரைசாமி, குகா செல்வம் வெளியேறியதால் அவர்களுக்குத்தான் இழப்பு என்றும், தேவையற்ற பொருள்கள் திமுகவை விட்டு வெளியில் செல்வது எங்களுக்கு நல்லதுதான் என திருவாரூரில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

2019 20 ஆம் ஆண்டிற்கான சம்பா தாளடிக்கான பயிர் காப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பொருத்தவரை 384 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவாரூர் மாவட்டத்திற்கு 146 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதன் மூலம் ஒரு லட்சத்து 5,000 விவசாயிகள் பயனடைவார்கள். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 68 கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது இதில் மன்னார்குடியில் மட்டும் 25 கிராமங்கள் விடுபட்டுள்ளன. இது குறித்து முன்கூட்டியே அறிந்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து ஆனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகை பெறுவதற்காக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். திமுகவிலிருந்து விபி துரைசாமி குகா செல்வம் வெளியேறியதால் அவர்களுக்குத்தான் இழப்பு தேவையற்ற பொருள்கள் திமுகவை விட்டு வெளியில் செல்வது எங்களுக்கு நல்லதுதான் அடுத்ததாக தமிழகத்தில் திமுக ஆட்சி அமையப் போவது உறுதி.

தகுதியானவர்கள் குற்றச்சாட்டை சொல்லும்பொழுது உண்மையாயிருந்தால் அர்த்தம் இருந்தால் பதில் சொல்லலாம். அர்த்தமற்ற வீண்பேச்சு கெல்லாம் பதில் சொல்லவேண்டிய தேவையில்லை. திமுக தரைதட்டிய கப்பல் என அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா பதில் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பு திமுகவிற்கு உள்ளது. எதிர்காலத்தில் தமிழகத்தில் திமுகவின் ஆட்சி பிரகாசமாக அமையும் என தெரிவித்தார்.

Views: - 10

0

0