ஜெயலலிதா நினைவு மண்டபம்: தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றி

23 January 2021, 8:43 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு மண்டபம் நிறுவிய தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் பகுதியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய கிழக்கு மாநில செயலாளரும், அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவருமான அன்பழகன் பேசுகையில்,

மறைந்த தமிழக முதல்வர் புரட்சித்தலைவிக்கு நினைவு மண்டபம் நிறுவி அதனை வருகின்ற 27ம் தேதி திறக்க உள்ள தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்வதாகவும், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசின் செயலற்ற தன்மையால் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

Views: - 0

0

0