நகை கடை ஊழியர் கொலை விவகாரம்: கார் டிரைவர் உட்பட 4பேரை கைது செய்து விசாரணை

10 May 2021, 8:59 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் நகை கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கார் டிரைவர் உட்பட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் பிரணவ் ஜுவல்லரி என்ற நகை கடை உள்ளது. மதன் என்பவர் இதன் கடையின் உரிமையாளராக உள்ளார். புதிய நகைகள் வாங்க கடை ஊழியர் மார்ட்டின் சென்னைக்கு அனுப்பினார். பிரசாந்த் என்பவரது காரில் மார்ட்டின் சென்னைக்கு சென்றார். சென்னையில் ரூ.80 லட்சம் ரூபாய் செலுத்தி ஒன்றரை கிலோ நகைகளை பெற்றுக் கொண்டு உரிமையாளர் மதனிடம் செல்போன் மூலம் நகை வாங்கியதாக தொிவித்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் திருச்சி வரவில்லை மேலும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உரிமையாளர் மதன் இது குறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மார்ட்டினை அழைத்துச் சென்ற மாம்பழச்சாலை பகுதியை சேர்ந்த கார் டிரைவர் பிரசாந்த்(26) திரும்பி வந்து பின்னர் மாயமாகி விட்டதாக தொிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் மார்ட்டின் செல்போன் தொடர்பு பாடாலுாருடன் துண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பாடாலூர் பகுதியில் மார்ட்டின் சென்ற காரை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த பிரசாத்தை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தினர். பிரசாந்த் தனது காரை அந்த நகைக்கடைக்கு வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதில் கணக்கு வழக்கு உரிய வகையில் காட்டாததால் அதிக செலவு இருந்து வந்துள்ளது. இதனை கண்டறிந்த மார்ட்டின் அவரின் வாடகை கார்களை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டு, வேறொரு டாக்சி நிறுவன கார்களை பயன்படுத்த தொடங்கி உள்ளார். இதனால் பிரசாந்தின் வருமானம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளார்.

பாடாலுார் அருகே கார் வந்து கொண்டிருந்த போது ஏற்கனவே திட்டமிட்ட படி மற்றொரு காரில் அரவிந்த்(23), விக்ரம்(21), மற்றொரு பிரசாந்த்(21) ஆகியோர் காரை வழிமறித்து மார்ட்டினை கொன்று விட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து நால்வரையும் கைது செய்த போலீசார் பிணம் புதைக்கப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து உடல்கூறு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். மேலும் கொலையாளிகளிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் மேலும் மூன்று நபர்கள் தொடர்புள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 158

0

0