அராஜகமாக செயல்படும் பிஆர்ஓவை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் போராட்டம்

17 May 2021, 2:52 pm
Quick Share

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பத்திரிகையாளரிடம் அராஜகமாக செயல்படும் பிஆர்ஓ மோகனை கண்டித்து பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றிவரும் சு.மோகன் செய்தியாளர்களிடம் அராஜகமாக செயல்பட்டு வருகிறார். மேலும் இவர் பெரிய நிறுவனம், சிறு நிறுவனம், வாரப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கை, தின பத்திரிக்கை என செய்தியாளர்களை தரம்பிரித்து கேவலமாக பேசி அவருக்கு தேவைப்படும் செய்தியாளர்களை மட்டும் செய்தி சேகரிக்க அனுமதித்து மற்ற செய்தியாளர்களை கேவலபடுத்தி வருகிறார். மேலும் அரசு வழங்கும் செய்தியாளர்களுக்கான சலுகைகளை தனக்கு வேண்டிய நபர்களுக்கு மட்டும் வழங்கி, மற்ற செய்தியாளர்களின் உரிமைகளை தட்டிப் பறித்து வருகிறார். பிஆர்ஓ மீது செய்தியாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல புகார் மனுக்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

மீண்டும் மீண்டும் செய்தியாளர்களிடம் அவ மரியாதையாக நடந்து கொள்ளும் பிஆர்ஓ வை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தி செய்தியாளர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) பார்த்திபன் செய்தியாளர்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின் செய்தியாளர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு மேலும் மீண்டும் ஒரு புகார் மனுவை அவரிடம் அளித்தனர். பின்னர் இன்னும் இரண்டு நாட்களில் அவர் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் செய்தியாளர்கள் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 41

0

0