டீக்கடைக்கு தீ வைத்த 2 இளைஞர்கள்: தீ வைக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை

12 September 2020, 3:56 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டீக்கடைக்கு தீ வைத்த 2 இளைஞர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி தைக்கா தெரு பகுதியில் நேற்று மாலை 2 இளைஞர்கள் குடிபோதையில் ரகளை செய்துள்ளனர். பின்னர் அந்த பகுதி மக்கள் சத்தம் போட்டு 2 பேரையும் திருப்பி அனுப்பி உள்ளனர்.இந்நிலையில் இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக நள்ளிரவில் கூமாப்பட்டி தைக்கா தெருவிற்கு வந்த 2 இளைஞர்கள் வேஷ்டியை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு ஜலால் என்பவர் வைத்திருந்த டீ கடைக்கு தீ வைத்துள்ளனர்.

பின்னர் ஒருவர் அந்த வழியாக வருவதைக் கண்ட இருவரும் தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து அந்த தீ நள்ளிரவில் அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கடைக்கு இருவர் தீ வைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து யார் தீ வைத்தது என்பது குறித்து கூமாப்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 6

0

0