காதலிக்க மறுத்த பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யபட்ட வழக்கு: காதலன் உட்பட 3 பேர் கைது…

14 August 2020, 7:42 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யபட்ட வழக்கில் காதலன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தணிகைமணி- (வயது43.)இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் மாட்டுக்கறி விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த வடபாதி பகுதியை சிலம்பரசன் என்பவருக்கும், தணிகை மணியின் மூத்த மகளுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவ்விரு தரப்பிற்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது‌.

இந்நிலையில் நேற்று மாலை மகளின் காதல் விவகாரம் குறித்து காதலன் சிலம்பரசனை தணிகைமணி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் மற்றும் அவரது கூட்டாளிகளான விஜி, பீடிநகர் பகுதியை சேர்ந்த அக்கு , மளிகைகடை ராதா, சிவராமன், தஷ்ணாமூர்த்தி என 6 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து கறிவெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக கழுத்தில் வெட்டியதில் அலறி அடித்து ஓடிய தணிகைமணி அருகில் உள்ள பனந்தோப்பில் சரிந்து விழுந்திருக்கிறார்.

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆட்டோவில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சில நிமிடங்களிலே தணிகைமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் கொலையாளிகளை தேடிவந்தனர். இந்த நிலையில் காதலிக்க மறுத்த பெண்ணின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்யபட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி நூற்றுக்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர்.

இந்நிலையில் முக்கிய குற்றவாளிகளான வடபாதி பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த விஜி, பி டி நகர் பகுதியைச் சேர்ந்த அக்கு ஆகிய மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0