நிவர் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ள காஞ்சிபுரம்

23 November 2020, 10:33 pm
Quick Share

காஞ்சிபுரம்: புயல் முன்னெச்சரிக்கையை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 524 தற்காலிக தங்கும் சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

நிவர் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மழை மற்றும் வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 105 நிரந்தர சிறப்பு தங்கும் முகாம்களும் 524 தற்காலிக தங்கும் சிறப்பு முகாம்களும் 45 கால்நடை தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் மின்சாரத்துறை, மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறை ,வருவாய் துறை, பொதுப்பணித்துறை என 11 துறை அதிகாரிகள் உள்ளடங்கிய 19 குழு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய 52,400 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது.

மேலும் 64 ஜின் செட்கள், 65 இயந்திர ரம்பங்கள், 110 ஜேசிபிகள் , 12 வாட்டர் லாரிகள், 85 படகுகள் தயார் நிலையில் உள்ளது.மேலும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கிராம நிர்வாக அலுவலரை அனுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க வேண்டாம் என காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயலை எதிர்கொள்ள காஞ்சிபுரம் மாவட்டம் தயார் நிலையில் உள்ளது.

Views: - 0

0

0