கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா கொடியேற்றம்: ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம்

Author: kavin kumar
5 November 2021, 3:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற  கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர்.

புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற இஸ்லாமியர் ஒருவரால் நிர்வகிக்கப்படும் கௌசிக பாலசுப்பிரமணியர் கோயிலாகும் புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவினர்கள் அனைவரும் கவரும் கோயிலின் 69 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர். கந்தசஷ்டி பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வரும் 10ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதனை அடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

Views: - 206

0

0