காங்கேயத்தில் விவசாய கோழிப் பண்ணையாளர்கள் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

8 November 2020, 10:38 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயத்தில் விவசாய கோழிப் பண்ணை யாளர்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

காங்கேயம் அருகே, தாராபுரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஓ.வி.மூர்த்தி தலைமை வகித்தார். பின்னர் உரையாற்றிய மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி பேசியதாவது: கோழிப் பண்ணை நிறுவனங்கள் கோழி வளர்த்துக் கொடுப்பதற்கு பண்ணையாளர்களுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3 மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. 2013 ஆம் ஆண்டு அரசு ஒப்பந்தத்தில் தெரிவித்தபடி, வருடம் ஒன்றுக்கு 20 சதவீதம் உயர்திக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை கிலோ ரூ.3 மட்டுமே கோழிப்பண்ணை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

எனவே, கோழிப் பண்ணைக்குத் தேவையான தேங்காய் நார் மஞ்சி, மரக்கரி ஆகியனவற்றின் விலை மற்றும் தொழிலாளர் கூலி பல மடங்கு உயர்ந்து விட்டதால், கோழி வளர்த்துக் கொடுப்பதற்கு வளர்ப்புத் தொகையாக கிலோ ஒன்றுக்கு ரூ.12 என உயர்த்தி வழங்க வேண்டும். நெசவாளர்களுக்கு 700 யூனிட் மின்சாம் இலவசமாக வழங்குவது போல, மீனவர்களுக்கு 1000 லிட்டர் டீசல் இலவசமாக வழங்குவது போல, விவசாயம் சார்ந்த தொழிலாக உள்ள கோழிப் பண்ணைகளுக்கு 500 யூனிட் மின்சாரத்தை தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இந்தக் கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தருமபுரி, சேலம், கோவை, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 700-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.

Views: - 17

0

0