காங்கேயத்தில் இருசக்கர வாகனம் திருடிய நபர் கைது: 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல்…

Author: kavin kumar
20 August 2021, 4:31 pm
Quick Share

திருப்பூர்: காங்கேயம் பகுதியில் இரு சக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட மொடக்குறிச்சி சேர்ந்த சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மற்றும் ஊதியூர் பகுதிகளில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட மொடக்குறிச்சி சேர்ந்த சரவணன் என்பவர் பைக் திருடிய போது பொதுமக்களால் பிடித்து காவல் துறையினரிடம் கொடுக்கப்பட்டார்.காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே இரு சக்கர வாகனம் திருடியது தெரியவந்தது. கடைவீதியில் மளிகை கடை முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற சரவணனை அப்பகுதி பொதுமக்கள் துரத்திப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு விசாரணை மேற்கொண்டபோது ஏற்கனவே ஊதியூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இரண்டு பைக் மற்றும் ரொக்கப்பணம் 90 ஆயிரம் ரூபாயை கைப்பற்றினர். மேலும் கைது செய்யப்பட்ட சரவணனை காங்கேயம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு சிறையில் அடைத்தனர்.

Views: - 375

0

0